தமிழக அரசு சமீபத்தில் தொடங்கிய நம்மை காக்கும் நாற்பத்தி எட்டு என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் 10 நாட்களில் 2275 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன் நம்மை காக்கும் 48 என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் விபத்துகளில் சிக்கி படுகாயமுற்ற 2675 பேருக்கு தமிழக அரசினால் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களால் தமிழகம் முழுவதும் 610மருத்துவமனைகளில் கடந்த 10நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட #நம்மைகாக்கும்48 எனும் சிறப்புமிக்கதிட்டத்தின் கீழ் விபத்துகளில் சிக்கி படுகாயமுற்ற 2275பேருக்குஅரசினால் 19271200rs செலவுசெய்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது pic.twitter.com/BbkhtBryPa
— Subramanian.Ma (@Subramanian_ma) December 28, 2021