காமெடி நடிகர்கள் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகி மாறி வரும் நிலை அதிகரித்துள்ளது. வடிவேலு, சந்தானம், விவேக் வரிசையில் தற்போது ‘நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் கருணாகரன் ஆகியோர்களும் ஹீரோவாக மாறவுள்ளனர்.
தற்போது முன்னணி காமெடி நடிகர்களாக இருந்து வரும் ராஜேந்திரன் மற்றும் கருணாகரன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் ஹீரோக்களாக நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ‘கண்ணீர் அஞ்சலி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படமான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சாந்திநிகேதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தை குகன் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ராஜேந்திரன் மற்றும் கருணாகரன் ஆகிய இருவருக்கும் ஜோடிகளாக நடிக்கும் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், நாயகிகளின் தேர்வு முடிந்ததும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.