பொதுவாக விரல் நகங்கள் கூர்மையாக இருக்க வேண்டும், அதாவது நகக்கண் சரிசமமாக அமைந்திருந்தால் நல்லது. ஆள்காட்டி விரலுக்கு அடுத்து இருக்கிற பெருவிரலும் மோதிர விரலும் சரிசமமாக இருக்கிறவர்கள் இளவரசியாகக்கூடிய தகுதியெல்லாம் பெற்றவர்களாக இருப்பார்கள். தவிர, பொதுவாக நகக்கண் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது அதிர்ஷ்டத்தோட வெளிப்பாடு என்று சொல்வார்கள். இதையே மருத்துவத்தில் ஆரோக்கியத்தின் வெளிப்பாடு என்று வைத்தியர்கள் சொல்வார்கள்.
இது இல்லாமல் பொதுவாக விரல்கள் மென்மையாக இருக்க வேண்டும். நீளமாக இருக்க வேண்டும். எந்த அளவிற்கு நீளமான விரல்களோடு இருக்கிறார்களோ அந்த அளவிற்கு பெண்கள் அறிவுக்கூர்மையோடு இருப்பார்கள். ஆண்களுக்கும் இதேபோலத்தான். பொதுவாக குட்டை விரல்கள் அந்த அளவிற்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். எந்த அளவிற்கு விரல்கள் நீண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு அறிவுக்கூர்மை, கற்புநெறி, ஒழுக்கநெறி எல்லாம் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.