துரோகம் தனது உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது: சசிகலா நீக்கம் குறித்து நாஞ்சில் சம்பத்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்று முன் அதிமுகவில் இருந்து சசிகலாவையும், தினகரனையும் அதிரடியாக நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த அதிரடி நடவடிக்கையால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதை சற்றும் எதிர்பார்க்காத தினகரன் தரப்பினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல், ‘“எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய கூட்டம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.
“துரோகம் தனது உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அதிமுக பிரமுகர் நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.