திமுகவில் இருந்தபோது 12 கள்ள ஓட்டுக்கள் போட்டுள்ளேன். நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி தகவல்

திமுகவில் இருந்தபோது 12 கள்ள ஓட்டுக்கள் போட்டுள்ளேன். நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி தகவல்

nanjilதமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என அனைத்து கட்சிகளும் சமூக நல அமைப்புகளும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த போராட்டத்தில் முதல் நபராக காந்தியவாதி சசிபெருமாள் தமது இன்னுயிரை இழந்தார். அவரது இறப்பு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உயிர்நீத்த சசிபெருமாள் காந்தியவாதி இல்லை என அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக அரசின் நாடுபோற்றும் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் ஆர்.கே.நகர் வெற்றி குறித்த விளக்ககூட்டம் திருச்சி விமான நிலையம் பகுதி அதிமுக சார்பாக திருச்சி கீழப்புதூரில் நேற்றிரவு நடைபெற்றது.

இந்தகூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசுகையில், தமிழக அரசின் சாதனையை பொறுத்துகொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இப்போது மதுப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன. தமிழகத்தில் இல்லாமல் இருந்த மதுக்கொள்கையை அமல்படுத்தி நான்கு தலைமுறை மக்களை குடிகாரர்களாக ஆக்கியவர் திமுக தலைவர் கருணாநிதி. அவர் இப்போது மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்கிறார். இந்த நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.

காந்தியவாதி சசி பெருமாள் மரணத்திற்கு தமிழக அரசு பதில் சொல்லணுமாம். அவருக்கு மணிமண்டபம் கட்ட 5 லட்சம் தருகிறாராம் வைகோ. நான் கேட்கிறேன், சசி பெருமாள் காந்தியவாதியா இருக்க முடியாது. சசிபெருமாளுக்கு 2 மனைவி. அவர் எப்படி காந்தியவாதியாக இருக்க முடியும்.

காந்தி தனது வாழ்நாள் முழுக்க பிரம்மச்சாரியைப்போல் வாழ்ந்தவர். வெற்று விளம்பரத்திற்காக எதையும் செய்யதவர். ஆயுதம் ஏந்தாமல் அகிம்சை வழியில் போராட்டங்களை கையில் எடுத்தவர். அவர் வழியை பின்பற்றியதாக சொல்லப்படும் சசிபெருமாள், செல்போன் டவரில்  ஏறி போராட்டம் நடத்தினார். 60 வயதில் 75 அடி செல்போன் டவரில் ஏறினால் நிச்சயம் சாவுதான் மிஞ்சும்.

காந்தியவாதிக்கு சகிப்புதன்மை வேண்டும். சசிபெருமாளிடம் அப்படியான சகிப்புதன்மை இல்லை. அப்படிப்பட்டவர் எப்படி காந்தியவாதியாக முடியும். வைகோ சசிபெருமாளுக்கு மணிமண்டபம் கட்ட 5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.  வைகோவிற்காக  உப்பிலியாபுரம் வீரப்பன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், நொச்சிப்பட்டி தண்டபாணி என பலர் தீக்குளித்து மாண்டுபோனார்கள். அவர்களுக்கு எள்ளளவாவது உதவிகள் செய்திருப்பாரா. அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வைகோ நினைக்கவில்லையே ஏன்?
 
நீங்கள் செல்லாக்காசு என்பதை புரிந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, எங்கள் பட்டத்துராணி வீட்டுக்கே வந்து சந்தித்துவிட்டு போகிறார். அப்படி என்றால் அம்மாவின் நிர்வாக திறமையை பார்த்து இந்த நாடே வியந்து நிற்கிறது. நடுவில் சின்ன சஞ்சலத்திற்கு ஆளானோம். ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி வெளியே வந்த அம்மா, ஆர்கே நகரில் போட்டியிட்டார். வரலாறு காணாத வெற்றியை அம்மா பெற்றார்.  உடனே கருணாநிதி, கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார். கள்ள ஓட்டுபோடுவதை தமிழ்நாட்டுக்கு கற்றுதந்தவரே கருணாநிதிதான் காரணம். நான் கூட அந்த இயக்கத்தில் இருக்குபோது 12 ஓட்டு கள்ள ஓட்டு போட்டிருக்கேன். இப்போது அதற்கு சாத்தியமில்லை. காரணம் எல்லாம் கம்யூட்டர் மயமாகிடிச்சி.

அப்துல்கலாம் இறந்ததும், அம்மாவால் உடல்நிலை முடியாதநிலையில் அமைச்சர்களை அழைத்து உடனடியாக ராமேஸ்வரம் அனுப்பினார். ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 அப்பாவி தமிழர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகையும் வேலையும் அறிவித்து பணி ஆணை வழங்கியுள்ளார்.  இப்படிப்பட்ட தாயின் ஆட்சிதான் இனி தொடரும் அதற்குதான் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்” என முடித்தார்.

Leave a Reply