சோழர் காலத்திலும் ஒரு மானங்கெட்ட சம்பத். டுவிட்டரில் ஒரு ஆத்திரமான பதிவு
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வர் பதவியை வெகுவிரைவில் ஏற்கவுள்ள நிலையில் அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சசிகலாவை வாழ்த்தி அறிக்கை விட்டவர்களையும் நெட்டிஸன்கள் விடவில்லை.
இந்நிலையில் சசிகலா முதல்வர் பதவி ஏற்கவுள்ளது குறித்து கருத்து கூறிய அதிமுக தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத், ‘சோழர் காலம் மீண்டும் திரும்பி இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.
இதற்கு டுவிட்டரில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை பார்ப்போம்
சோழர்காலம் எப்படி இருக்கும்னு வாழ்ந்து பாத்துர்கியா
சோழர்காலம் திரும்பி இருக்கிறது! #நாஞ்சில் அரசியே!நீங்க ஆண்டாலும் பரவாயில்லை!இவனை முதலில் சிறைச்சேதம் செய்யுங்கள்! நாடு செழிக்கும்!
சோழர்காலம் மீண்டும் திரும்பியது #நாஞ்சில்_சம்பத் மன்னர் ஆட்சிக்கும், மன்னார்குடி ஆட்சிக்கும் வித்தியாசம் தெரியாத சோப்புளாங்கி!!!
சோழர்காலம் மீண்டும் திரும்பி இருக்கிறது-நா.சம்பத் #இத தஞ்சாவூர் கல்வெட்ல எழுதிட்டு பக்கத்துல உக்காரு பின்னாடி வர்றவங்க படிச்சி தெளியட்டும்
சோழர் காலம் மீண்டும் திரும்பி இருக்கிறது – அதிமுக நாஞ்சில் சம்பத் Innova சம்பத், Fortuner க்கு அடிபோடுறது தெரியுது
சோழர் காலம் மீண்டும் திரும்பி இருக்கிறது – நாஞ்சில் சம்பத் அப்படி சொல்லுடா என் செல்லாகுட்டி.!குந்தவை நாச்சியாரேன்னு சத்தமா சொல்லுடா ராசா