ஒரே பேட்டியில் பதவியை இழந்த நாஞ்சில் சம்பத். அதிமுகவின் அதிரடி

ஒரே பேட்டியில் பதவியை இழந்த நாஞ்சில் சம்பத். அதிமுகவின் அதிரடி

nanjilபிரபல தொலைக்காட்சியான தந்தி டிவியில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்து கொண்டிருக்கும்போதே அதிரடியாக அவர் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக தலைமையிடம் இருந்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று தந்தி டிவியில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் அவர் பதில் கூறியதாக தெரிகிறது.

சென்னையில் பெருவெள்ளம் புரட்டி போட்ட நிலையில் பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக, கொண்டாட்டமாக நடப்பது சரியா என்ற கேள்விக்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், ‘எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காம இருக்க முடியுமா’ என்று பதில் கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த பேட்டி ஒளிபரப்பாகும்போது இணையதளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன

வெள்ளத்தில் உயிரிழந்த 500 பேர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஏன் அதிமுக பொதுக்குழுவில் அதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்ற கேள்விக்கு, தேவையில்லை, அதனால் நிறைவேற்றவில்லை என்று நாஞ்சில் பதிலளித்துள்ளார். ஆனால் உண்மையில் அதிமுக பொதுக்குழுவில் வெள்ளத்தால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுக்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள் என்னென்ன என்றே தெரியாமல் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத்தின் மீது எடுத்த நடவடிக்கை சரியே என்று பலர் இணையதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை இந்தியாவில் எந்த கட்சியும் எடுக்க முடியாது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply