சாப்பிடும் போது செல்போன் அல்லது மடிக் கணினி பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு என்றே நாப்கின் கீ போர்டை கொண்டுவர உள்ளது கேஎப்சி நிறுவனம். இதற்கான ஆய்வுகளை நடத்தி வருகிறது.
சாப்பிடும் ட்ரே- வில் இந்த பேப்பர் நாப்கினை வைத்து கீபோர்டாக பயன்படுத்தலாம். கையில் உள்ள உணவோடு கீ போர்டை பயன்படுத்த முடியாது என்கிற நிலையில் இந்த நாப்கின் கீ போர்டில் டைப் செய்தால் புளூடூத் வழி மொபைல் அல்லது கணினிக்கு வந்துவிடும்.