நாராயணா கோஷம் முழங்க.. திருப்பதியில் சக்ரஸ்நானம்!

[carousel ids=”58891,58892,58893,58894,58895″]

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு உள்பட்ட திருப்பதி கோதண்டராமர் சுவாமி கோவிலில் கடந்த 9 நாட்களாக நடந்துவந்த பிரம்மோற்சவ விழா சக்ரஸ்நானத்துடன் நிறைவு பெற்றது. தேன்,தயிர்,சந்தனம்,இளநீர் மற்றும் பால் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்ட சுதர்சன சக்கரத்தை கோவில் அர்ச்சகர்கள் எடுத்துச்சென்று குளத்தில் மூன்று முறை முக்கியெடுக்க சக்ரஸ்நானம் நிறைவு பெற்றது. சக்ரஸ்நானத்தை சக்ரஸ்நானம் நடைபெறும்போது தரிசிக்க வந்திருந்த பக்தர்கள் நாராயணா.. நாராயணா என்ற கோஷம் எழுப்பியபடி கோவில் குளத்தில் முழ்கி எழுந்தனர்.

Leave a Reply