விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பிடுங்குவோம். ஆந்திர அமைச்சரின் அடாவடி பேச்சு.

vijayawada-gunturஆந்திராவில் புதிய தலைநகர் விஜயவாடா– குண்டூர் இடையே மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் ஆந்திர அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தலைநகருக்காக தங்களது விளை நிலங்களை கொடுக்கமாட்டோம் என  கிருஷ்ணா நதியோர வசிக்கும் கிராம விவசாயிகள் அறிவித்துள்ளனர். ஆனால் தலைநகருக்கு நிலங்களை விவசாயிகள் தாமாகவே முன்வந்து நிலங்களை தராவிட்டால் அவர்களிடம் இருந்து நிலங்களை பிடுங்குவோம் என்று நகர அபிவிருத்தி மந்திரி நாராயணா கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நாராயணா, “புதிய தலைநகரை காடுகளிலா அமைக்க முடியும். அதனால்தான் விஜயவாடா– குண்டூர் இடையே தலைநகர் அமைக்க சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்படவிருக்கும் புதிய தலைநகருக்கு நிலங்களை தரமாட்டோம் என்று விவசாயிகள் ஒரு சிலரின் தூண்டுதலினால் கூறி வருகிறார்கள். அவர்கள் நிலங்களை தராவிட்டால் நில ஆர்ஜித சட்டப்படி அந்த நிலங்களை பலவந்தமாக பிடிங்குவோம். சில முடிவுகள் கடுமையாக இருந்தால்தான் தலைநகர் சிறப்பாக அமைக்க முடியும்.

இவ்வாறு மந்திரி நாராயணா கூறினார். மந்திரியின் இந்த அடாவடி பேச்சு விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply