நீண்ட இழுவைக்கு பின்னர் புதுவை முதல்வர் ஆகிறார் ‘நாராயணசாமி’

நீண்ட இழுவைக்கு பின்னர் புதுவை முதல்வர் ஆகிறார் ‘நாராயணசாமி’

narayayavc11தமிழகம், புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்காளம், கேரளா, என ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. புதுவை தவிர மற்ற மாநிலங்களில் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் நேற்று வரை புதுவை முதல்வர் யார் என்ற அறிவிப்பே இல்லாமல் இருந்தது. நாராயசாமி, நமச்சிவாயம், வைத்திலிங்கம் ஆகிய மூவருமே முதல்வர் பதவியை பிடிப்பதில் போட்டி போட்டதால் யார் முதல்வர் என்பதை அறிவிப்பதில் காங்கிரஸ் தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஒருவழியாக ஒன்பது நாள் இழுபறிக்கு பின்னர் புதுச்சேரி முதலமைச்சராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று புதுச்சேரி முதல்வரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதலமைச்சராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவை தாங்கள் ஏற்பதாகவும், புதிய முதல்வருக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறிக்கொள்வதாகவும் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply