கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் காரணமாக கடந்த காலங்களில் மோடிக்கு அமெரிக்கா விசா கொடுக்காமல் இழுத்தடித்து வந்தது. அதனால் மோடி அமெரிக்காவில் கலந்துகொள்ள வேண்டிய சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமர் ஆனதை அடுத்து அவருக்கு அமெரிக்க விசா கொடுக்க அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அமெரிக்கா வரும்படி அவருக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
ஒபாமாவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்லும் போது, அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இந்தியத் தூதர் தேவ்யானி கோப்ரகடே, கைது செய்யப்பட்ட விவகாரத்தின்பொது இந்தியா – அமெரிக்கா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இந்நிலையில், இருநாட்டு உறவுகளில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய ஒபாமா அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளார் என பிரதமர் வலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறாது. .
ஒபாமா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் சந்திப்புத் தேதிகளை இறுதி செய்வதற்காக, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கர், வரும் 8ஆம் தேதி இந்தியா வருகிறார்.