பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி

modi as pmஇந்தியாவின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து பேசிய நரேந்திரமோடி, திடீரென உணர்ச்சிவசப்பட்டு அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மோடி தனது உரையில் பிரதமர் பதவி என்பது  மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரும் பதவிதான் என்றும் தனிப்பட்ட ஒருவரின் புகழுக்கு சொந்தமானது என்றும் கூறினார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தி்ல்,  பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட்ட பேசிய மோடி,கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றம் என்பது கோயில் போன்றபுதினமான இடம், இதில் மக்களின் தொண்டு ஒன்றே முக்கிய குறிக்கோளாக கருதப்படும் என்றும், இதை அனைத்து எம்.பிக்கள் புரிந்துகொண்டு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கூறினார்

ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனுக்காக தமது அரசு தொடர்ந்து உழைக்கும் என்றும், ஏழைகளின் விருப்பதைவும், நாட்டு மக்களின் கனவையும் பாஜக அரசு நிறைவேற்றா பாடுபடும் என்றும் கூறினார். இந்த நேரத்தில் நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களுக்காக தலைவணங்குகிறேன் என்று கூறிய மோடி, திடீரென உணர்ச்சிவசப்பட்டு அழுதார். இருப்பினும் சிறிது நேரத்தில் தன்னையே தேற்றிக்கொண்டு அவர் தொடர்ந்து உரையாற்றினார். அப்போது ஓரிரு நிமிடங்களுக்கு அவரது குரல் விம்மலுடன் வெளிப்பட்டது.

மோடி தனது உரையின் இடையே முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நினைவு கூர்ந்ததோடு, அவர் இங்கே இருந்திருக்க வேண்டும் என்றார்.

Leave a Reply