பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இதுநாள் வரை பிரம்மச்சாரி என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், தான் திருமணமானவர் என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் வதேரா தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்த மோடி, அதில் தான் திருமணமானவர் என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.அவருடைய மனைவியின் பெயர் Jashodaben என்றும், அவர் ஒரு ஓய்வு பெற்ற பெற்ற ஆசிரியை என்றும், அவருடைய வீடு மோடியின் பிறந்த ஊரான வாத்நகர் என்ற கிராமத்தின் அருகில் உள்ளது என்றும், தெரிய வந்துள்ளது.
கடந்த காலங்களில் ‘நான் திருமணமாகாதவன், எனக்கென்று ஒரு குடும்பம் இல்லை. நான் ஏன் ஊழல் செய்யவேண்டும் என்று வீராவேசமாக பேசிவந்த மோடி, திடீரென தனக்கு திருமணம் ஆனதை ஒப்புகொண்டதற்கு என்ன காரணம் என்று புரியாமல் பாஜகவினரே குழம்பி வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியினர் மோடியின் வேட்புமனுவில் உள்ள விவரங்களை கூர்மையாக கவனித்து வந்ததாகவும், வேட்புமனுவில் திருமணம் ஆகாதவர் என்று பதிவு செய்தால், அதை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அவர்கள் தயார் நிலையில் இருந்ததாகவும், அதனால்தான் மோடி தனது வேட்புமனுவில் திருமணமானவர் என்பதை ஒப்புகொண்டதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.