நூலிழையில் உயிர்தப்பினார் ராகுல்காந்தி. உ.பியில் பரபரப்பு
உத்தரபிரதேச மாநில தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 2,500 கி.மீ. தூர யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று 21-வது நாளாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் சரபா பஜார் பகுதியை அடைந்தார்.
மகாராஜா அக்ராசென் பிறந்தநாளையொட்டி, அங்குள்ள அவரது சிலைக்கு ராகுல் மாலை அணிவித்தார். பின்னர் யாத்திரையை தொடர்வதற்காக அவர் திரும்பியபோது, அவரது முதுகுக்கு பின்னால் சென்று கொண்டிருந்த மின்சார வயர், அவரது இடது காதில் உரசியது. இதனால் ராகுல் காந்தியை மின்சாரம் தாக்கியது. ஆனால் உடனே சுதாரித்து கொண்ட ராகுல், உடனே குனிந்து கொண்டாதால் காயமின்றி அவர் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், கூறும் போது ராகுல் தற்போது நலமாக உள்ளார். ஜெனரேட்டர் மூலமாக மின்சப்ளை நடந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்று கூறினார்.