செவ்வாய் கிரகத்தில் உயிரோடு இருக்கும் துருவக்கரடி. நாசா வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு

செவ்வாய் கிரகத்தில் உயிரோடு இருக்கும் துருவக்கரடி. நாசா வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு
bear
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதாக பல ஆண்டுகளாக யூகமான செய்திகள் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் பல்வேறு தகவல்களை கொடுத்து வருகிறது. இந்தியாவின் மங்கள்யான், நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரோபோ ஆகியவை அனுப்பும் புகைப்படங்களை வைத்து விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரோபோ அனுப்பிய புகைப்படங்களை சமீபத்தில் ஆய்வு செய்தபோது அதில் துருவக்கரடி ஒன்று தென்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த துருவக்கரடியின் புகைப்படங்களை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் யு.எஃப்.ஓ. சைட்டிங்ஸ் டெய்லி என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

ரோமத்துடன் உள்ள துருவக் கரடி நிழலின் மூலமாக தெளிவாக தெரிவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் இணையதளத்தில் ஏற்கனவே வெளியான செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களில், நண்டுகள், பெண் உருவம், புத்தர் சிலை போன்றவை தென்படுவதாக இதில் செய்தி வெளியானது, குறிப்பிடத்தக்கது.

English Summary: NASA news: U.N. alerted after baby bear spotted walking on Mars

Leave a Reply