புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது அமெரிக்க ராக்கெட். பெரும் பரபரப்பு.

    rocket 5 சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்து செல்ல அனுப்பப்பட்ட அமெரிக்க ராக்கெட் ஒன்று வெடித்து சிதறிதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1xCPde4″ standard=”http://www.youtube.com/v/TrqmiJGOx3Q?fs=1″ vars=”ytid=TrqmiJGOx3Q&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9872″ /]

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்ல அனுப்பப்பட்ட அமெரிக்கா சரக்கு ராக்கெட் ஒன்று ஏவிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப காரணத்தால் வெடித்து சிதறியதாக நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

rocket 2

அறிவியல் சோதனைக்கான உபகரணங்களோடு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, 5,055 பவுண்டுகள் எடை கொண்ட அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு ராக்கெட் ஒன்று நேற்று புறப்பட தயாராக இருந்தது. அனைத்து சோதனைகளும் செய்த பின்னர் கிழக்கு வெர்ஜினியாவில் உள்ள நாசா ஏவு தளத்திலிருந்து இன்று காலை 6.22 மணிக்கு அந்த ராக்கெட் கிளம்பியது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிழம்புகளுடன் பயங்கர சத்தத்துடன் அது வெடித்து சிதறியது.

rocket

இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்றாலும், ராக்கெட் ஏவுதளத்திற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ராக்கெட் விபத்து குறித்து தீவிர விசாரணைக்கு நாசா உத்தரவிட்டுள்ளது.

rocket 4

rocket 1

rocket 3

Leave a Reply