செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா

செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா

விண்வெளி துறையில் அவ்வப்போது புதிய முயற்சிகளை எடுத்து வரும் அமெரிக்காவின் நாசா அமைப்பு தற்போது முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவில் 4 ஆண்டு காலம் உழைத்து, சிறிய அளவிலான ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளனர். .

இந்த ஹெலிகாப்டர் பூமியை விட 100 மடங்கு மெல்லிய செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் பறப்பதற்கு உகந்ததாக உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ‘நாசா’ நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறியதாவது:

மற்றொரு கிரகத்தின் வான்வெளியில் ஹெலிகாப்டரை பறக்க விடுவது என்பது மெய் சிலிர்க்க வைக்கக்கூடியதாக அமைந்து உள்ளது. நமது வருங்கால அறிவியல், கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டங்களை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவும்

‘ட்ரோன்’ என்று அழைக்கப்படக்கூடிய ஆளில்லாத விமானத்துக்கு பதிலாக பறக்க உள்ள இந்த ஹெலிகாப்டருக்கு விமானி கிடையாது. பூமியில் இருந்து இந்த ஹெலிகாப்டர் 5½ கோடி கி.மீ. தொலைவுக்கு பறக்கும். எனவே ‘ரிமோட் கண்ட்ரோல்’ சமிக்ஞை எதையும் அனுப்புவதற்கு முடியாது.

2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ரோவருடன் இணைத்து அனுப்பப்படுகிற இந்த ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தை 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்று அடையும் என்று ‘நாசா’ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply