நாசாவின் மூத்த விஞ்ஞானி மரணம்
அமெரிக்காவில் உள்ள மூத்த விஞ்ஞாவிண்வெளி வீரரும், நிலவுக்கு 2 முறை சென்று திரும்பியவருமான ஜான் யங் என்பவர் கடந்த வெள்ளியன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 87
அமெரிக்காவின் நாசா மையத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஜான் யங். இவர் 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 10 விண்கலம் மூலம் சந்திரனுக்கு பரிசோதனை அடிப்படையில் சென்றார். அப்போது இவர்களது விண்கலம் சந்திரனில் தரை இறங்கவில்லை. அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து அப்பல்லோ 11 விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது. இவர் ஜெமினி, அப்பல்லோ மற்றும் ஸ்பேஸ் ஷட்டில் விண்கலங்கள் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார்.
ஜான் யங் மரணம் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலக மக்களுக்கே பெரும் இழப்பு என நாசாவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். மரணம் அடைந்த ஜான் யங் அவர்களுக்கு அதிபர் டிரம்ப் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.