272 கோடி கிமீ பயணத்தை முடித்து வியாழனுக்குள் நுழைந்தது நாசாவின் ஜூனோ

272 கோடி கிமீ பயணத்தை முடித்து வியாழனுக்குள் நுழைந்தது நாசாவின் ஜூனோ

75 ஆண்டுகளுக்கு முன்னர் வியாழன் கிரகத்தை ஆய்வு செய்ய $110 கோடி செலவில் திட்டமிட்டு ஏவப்பட்ட ஜூனோ என்ற விண்கலம் 270 கோடி கிலோமீட்டர் கடந்து நேற்று வெற்றிகரமாக வியாழன் கிரகத்தினுள் நுழைந்தது. சூரியனிலிருந்து 5வது கிரகமாக அமைந்துள்ள வியாழன் (Jupiter) சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள்.

சூரிய மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாமல் புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோள். சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல்தளத்தில் திரட்சியான திடப்பொருள் எதுவும் வியாழனில் இல்லை.

வியாழன் கிரகம் தன்னைத்தானே 9 மணி 50 நிமிடத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் சுற்றி விடும். சூரிய சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது. இந்த வியாழன் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி அன்று புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கார்னிவல் ஏவுதளத்தில் இருந்து ‘ஜூனோ’ என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவியது.

கடந்த 5 ஆண்டுகளாக விண்வெளியை சுற்றிப் பயணித்த ஜூனோ நேற்று வெற்றிகரமாக வியாழனின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. வியாழனுக்குள் ஜூனோ பிரவேசித்த வெற்றியை நாசா அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் கொண்டானர்.

Leave a Reply