மோடி விழாவில் பங்கேற்க கேரள முதல்வருக்கு ஏற்பட்ட சிக்கல். பெரும் பரபரப்பு

மோடி விழாவில் பங்கேற்க கேரள முதல்வருக்கு ஏற்பட்ட சிக்கல். பெரும் பரபரப்பு
umman chandy
பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். கடந்த 1962 முதல் 1964ஆம் ஆண்டு வரை கேரள முதல்வராக இருந்தவ ஆர். சங்கரின் சிலை திறப்பு விழாவில் இன்று மோடி கலந்து கொள்கிறார். கொல்லத்தில் நடைபெறும் இந்த விழா ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த கேரள முதல்வர் உம்மண்சாண்டியை இந்த விழாவிற்கு வரவேண்டாம் என சற்று முன்னர் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் செயலர் வெல்லப்பள்ளி நடேசன் என்பவர் வேண்டுகோள் விடுத்ததாக பரபரப்பான செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் உம்மண்சாண்டி கூறியபோது, “திடீரென அந்த அமைப்பின் செயலர் என்னை தொடர்பு கொண்டு விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று கூறியது கடும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் ஆர். சங்கர், கேரளத்தின் முன்னாள் முதல்வர். கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டவர். ஆனால் விழா ஏற்பாட்டாளர்கள் இத்தகைய வேண்டுகோள் விடுத்ததால், என்னால் அந்த விழாவில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.” என்று வேதனையுடன் கூறியுள்ளார்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இந்த சம்பவம் குறித்து கூறும்போது, ”எதிர்கட்சியை சேர்ந்த முதல்வர்களை அவமானப்படுத்துவதை பாரதிய ஜனதா கட்சி நோக்கமாக கொண்டுள்ளது. எதிர்கட்சியை சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குரிய சம்பிராதாய மரியாதைகளை கொடுக்கமால் அவர்களை புறக்கணிப்பதுதான் பாரதிய ஜனதா கட்சி நடத்தும் கீழ்த்தரமான அரசியல்”  எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தி தொடர்பாளர் அசோக் சிங்வி, ” உம்மன் சாண்டி அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநில முதல்வர். அவரை புறக்கணிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அவமானப்படுத்தியதற்கு சமம் . பாரதிய ஜனதா அரசின் இத்தகைய செயல்பாட்டுக்கு பதில் அளித்தேயாக வேண்டும். பிரதமர் இந்த விவகாரத்திற்கு விளக்கமளித்தே ஆக வேண்டும் ” என்றார்.

இந்த பிரச்சனையை பாராளுமன்றத்தில் கிளப்ப காங்கிரஸ் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

English Summary: It was learnt Hindu Ezahva leader Vellappally Natesan told Chandy not to turn up for the event associated with the late Congress Chief Minister.

Leave a Reply