சண்டிகர், மொஹாலியில் செயல்பட்டு வரும் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (NIPER) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவிப் பதிவாளர், தொழில்நுட்ப மேற்பார்வையாளர், விஞ்ஞானி, தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. தொழில்நுட்ப மேற்பார்வையாளர் கிரேடு-I, விஞ்ஞானி கிரேடு-I-09
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்,எஸ்சி தேர்ச்சியுடன் 6 ஆண்டு ஆராய்ச்சி, கற்பித்தல் பணியில் அனுபவம் அல்லது எம்.பார்ம் முடித்து 4 கற்பித்தல் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
2. தொழில்நுட்ப மேற்பார்வையாளர் கிரேடு- II, விஞ்ஞானி கிரேடு -II – 02
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்,எஸ்சி தேர்ச்சியுடன் 3 ஆண்டு ஆராய்ச்சி, கற்பித்தல் பணியில் அனுபவம் அல்லது எம்.பார்ம் முடித்து 2 கற்பித்தல் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
3. தொழில்நுட்ப உதவியாளர்- 01
தகுதி: கணினி அறிவியல் இளநிலை பட்டம் பெற்று தரவு மேலாண்மை மற்றும் இணைய நிர்வாகத்தில் மூன்று ஆண்டு அனுபவம் அல்லது கணினி அறிவியல் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
4. உதவி பதிவாளர்- 02
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் அல்லது ஒரு நிறுவனத்தில் பொறுப்பான மேற்பார்வை பணியில் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
5. பிரிவு அதிகாரி
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் தர ஊதியம் ரூ.4,200 அடிப்படையில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது தர ஊதியம் ரூ.2,800 அடிப்படையில் சம்மந்தப்பட்ட துறையில் 10 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தர ஊதியம் ரூ2,400 அடிப்படையில் சம்மந்தப்பட்ட துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக் க வேண்டும்.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. இதனை Director, NIPER என்ற பெயருக்கு Mohali, Chandigarh-ல் மாற்றத்தக்க வகையில் டி.டியாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.niper.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை போன்று விண்ணப்பம் தயார் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கட்டணத்திற்கான டி.டி.யை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar,
National Institute of Pharmaceutical Education & Research (NIPER),
Sector 67, SAS Nagar (Mohali) – 160062.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி28.12.2015
மேலும் விவரங்கள் அறிய www.niper.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்