சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில்ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நேற்று கொடியேற்றம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி அம்மன் சமேத ஆனந்த நடராஜர் சுவாமி ஆனித்திருமஞ்சனம் மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையொட்டி காலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நடராஜர் சன்னதி கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து பிரகாரம் வலம் வந்து கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் உற்சவ ஆச்சாரியார் குஞ்சிதபாதம் தீட்சிதர் கொடிமரத்திற்குசிறப்பு பூஜை செய்து காலை 9:45 மணிக்கு ஆனித் திருமஞ்சனஉற்சவக் கொடியேற்றினார்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் “பொன்னம்பலத்தானே, தில்லை நடராஜரே என கோஷம் எழுப்பிசுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.