அதிகமாக வெயில் காலங்களில் வரும் தோல் அரிப்பு நோய்களில் ஒன்று தான் படர்தாமரை. பூஞ்சையினால் ஏற்படும் படர்தாமரை உங்களது சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக இருக்கும். இது சருமம், நகம், ஸ்கால்ப், உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும்.
கடுமையான அரிப்புகளை ஏற்படுத்துவதுடன் பிறருக்கு எளிதில் பரவக்கூடியது. எனவே உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
1. பூண்டை அரைத்து சாறு எடுத்து அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வந்தால் நிவாரணம் பெறலாம்.
2. படர்தாமரை உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி வர படர்தாமரை நீங்குவதோடு பரவுவதும் தடுக்கப்படும்.
3. கடுகு அல்லது அதன் எண்ணெயை அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி வந்தாலும் படர்தாமரை மறையும்.
4. ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் கற்பூரத்தில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் இருப்பதால் படர்தாமரைக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
5. மஞ்சள் தூள் பூஞ்சையின் தாக்குதல்களை தடுக்கும் வல்லமை படைத்தது. இதனை தடவி வந்தால் படர்தாமரை நீங்கும்.