* தடுப்பூசி போட்டால் உடலில் சூடு அதிகரிக்கும். அதுபோல, ஸ்டிராய்டு ஊசி போட்டாலும் சூடு அதிகரிக்கும். அதைத்தான் காய்ச்சல் என்று சொல்லி மருந்து தரப்படுகிறது.
* மது குடிப்பவர்களுக்கு, அடிக்கடி சிகரெட் பிடிப்பவர்களுக்கு உடலில் சூடு அதிகமாக இருக்கும்.
* மாதவிடாய் மற்றும் மகப்பேறு சமயங்களில் சில பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்.
* தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கும் சூடு, உடலில் அதிகமாக இருக்கும்.
* நீண்ட தூர பயணங்களுக்கு பின், உடல் சூடு காணும்.
உடல் சூட்டை எப்படி சமாளிப்பது?
உடலில் உள்ள சீரற்ற தன்மையை சரி செய்ய ஒரே வழி உணவும், பழக்க வழக்கங்களும் தான். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் இருந்தால் பிரசச்னை ஏற்படும். அதுபோல, உணவுகளில் மாற்றம் இருந்தாலும் இதே தொல்லை தான். அதனால், இந்த இரண்டிலும் கவனம் தேவை. உடலில் சூடு தணிய வேண்டுமானால், உணவில் மாற்றம் ஏற்பட வேண்டும். இப்போது “ஜங்க் புட்’ என்று சொல்லப்படும் கொழுப்பு உணவுகளால் கூட உடலில் மாற்றம் ஏற்படுகிறது.
அதனால் தான் இதை சாப்பிடுவோருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. என்ன உணவு சாப்பிட்டாலும், சத்தான, உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பச்சைக் காய்கறி, சத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு எட்டிப்பார்க்கக்கூட செய்யாது. இதை வளர் இளம் பெண்கள் மனதில் கொள்ள வேண்டும். வழக்கமான உணவுகளில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் என்று சேர்த்துக் கொள்வதுடன், இந்த உணவுகள் சேர்ப்பது மிக முக்கியம்.
* தர்பூசணி மட்டுமல்ல, கிர்ணி உட்பட பல வகை நீர்ச்சத்து உள்ள பழங்களில் பொட்டாசியம் சத்து உள்ளது. துண்டாக்கியோ, ஜூசாகவோ சாப்பிடலாம்.
* பொதுவாகவே கீரை வகைகள் உடலுக்கு நல்லது. மக்னீசியம் சத்துள்ள பசலைக் கீரையை சமைத்து சாப்பிட்டால், உடல் சூடு தணிவதுடன், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது.
* கோடையில் மட்டுமல்ல, பொதுவான சமயங்களில் வெள்ளரியை துண்டாக்கி சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். நார்ச்சத்து உள்ளது.
* சிலருக்கு தயிர், மோர் சாப்பிடும் பழக்கமே இல்லை. இப்போது தான் பழக்கத்தை ஆரம்பித்துள்ளனர். தயிர் சாப்பிடுவது மிக நல்லது. சூடு தணிந்து, இதத்தை தரும் தயிர், கண்டிப்பாக சாப்பாட்டில் சேருங்கள். இப்படி எத்தனையோ சத்தான உணவுகள் உள்ளன. என்ன தான் ஜாலிக்காக வெளியில் வாய்க்கு ருசி என்று நினைத்து சாப்பிட்டாலும், இந்த சத்தான உணவுகளை மறக்கவே கூடாது தானே.