சுயசரிதை மூலம் நட்வர்சிங் ஏற்படுத்திய பரபரப்பு. சோனியா கடுங்கோபம்.

natwar singh and soniaகாங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர்சிங் எழுதியுள்ள சுயசரிதை புத்தகம் காங்கிரஸ் கட்சியிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி குறித்து அவர் தனது புத்தகத்தில் கூறியிருக்கும் தகவல்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடித்தபோது சோனியா காந்திதான் பிரதமர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ராகுல்காந்தி கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாகத்தான் அவர் பிரதமர் பதவியை ஏற்கவில்லை. பதவி ஆசையை பிள்ளைப்பாசம் தோற்கடித்துவிட்டது என்று எழுதியுள்ளார்.

மேலும் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தாலும், சோனியா காந்திதன் சூப்பர் பிரதமர் போல செயல்பட்டதாகவும், பிரதமர் அலுவலக முக்கிய கோப்புகள் அனைத்தும் சோனியா காந்தியின் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை தமிழர் பிரச்சனையில் ராஜீவ் காந்தி ஆரம்பத்தில் இருந்தே தவறான முடிவை எடுத்தார் என்றும் இந்திய அமைதிப்படையை அனுப்புவதற்கு முன்பு உயரதிகாரிகளுடனோ அல்லது அமைச்சரவையிலோ அவர் ஒப்புதல் பெறவில்லை என்றும் தன்னிச்சையாகவே அவர் இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பினார் என்றும் அவர் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அருண்நேரு, அருண்சிங் ஆகியோர்களை கண்மூடித்தனமாக நம்பி அவர்கள் கொடுத்த தவறான ஆலோசனையின் பேரில் பல முடிவுகளை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நட்வர்சிங்கின் புத்தகத்தில் இருக்கும் தகவல்களை அறிந்து சோனியா காந்தி கடும் கோபத்தில் உள்ளார். இதுகுறித்து அவர் கருத்துகூறும்போது” நானும் எனது சுயசரிதையை எழுதி புத்தகமாக வெளியிடுவேன். அப்போது உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும்

Leave a Reply