நவநீதம்பிள்ளையின் நாயைக் கூட இலங்கைக்குள் நுழையவிட மாட்டோம். இலங்கை மந்திரியின் அடாவடி பேச்சு

navi-pillay copy

ஐ.நா மனித உரிமை கழகத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நாய்கூட இலங்கைக்குள் நுழைந்து விசாரணை நடத்த முடியாது என்று இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா திமிராக கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள பதுளை என்ற இடத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மந்திரி சிறிபால டி சில்பா பேசியபோது “எமக்கென்று மகத்துவம் உள்ளது. நாட்டிலுள்ள உள் விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையீடுவதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது. அதற்கு சிறிதும் இடமளிக்க மாட்டோம்.

எங்களது வீட்டில் பிரச்னை இருந்தால் எங்களாலேயே அதற்கு தீர்வு காண முடியும். அதேபோல எங்கள்  நாட்டில் என்ன  பிரச்னை இருந்தாலும் அதற்கு எங்களால் தீர்வு பெறா முடியும். எங்கள் ஜனாதிபதியும் எங்கள் அரசாங்கமும் சர்வதேச சதிகளுக்கு எதிராக ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக போராடினோம்.

நவநீதம்பிள்ளை அம்மையார் அல்ல அவரது வீட்டு நாய்கூட எங்கள் நாட்டிற்கு வந்து விசாரணை நடத்துவதற்கு நாங்கள் ஒருகாலும் இடமளிக்க மாட்டோம்.

எங்களது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே எமது நாட்டின் சுயாதீனத்தன்மை, இறையாண்மை மற்றும் மகத்துவத்தை பாதுகாப்பதற்கும் நாட்டின் அபிமானத்தை பாதுகாப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஒருவரவராக இருக்கின்றார்.

Leave a Reply