நவரத்ன குருமா

navaratna-kurma212

 தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர்                              – 1 சிறியது

பச்சைப் பட்டாணி                    – 1/2 கப்
கேரட்                                             – 1
உருளைக்கிழங்கு                     – 1
பீன்ஸ்                                            – 10
எலுமிச்சம் பழச்சாறு               – 3 டீஸ்பூன்
தேங்காய் துருவியது              – 1 கப்
முந்திரிப் பருப்பு                        – 20
பெரிய வெங்காயம்                  – 1
முந்திரி, கிஸ்மிஸ் சேர்ந்து  – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு, நெய்           – தேவையான அளவு
கொத்தமல்லி                             – சிறிது

அரைக்க

பட்டை, கிராம்பு, ஏலக்காய்   – 6 (தலா 2)

பச்சை மிளகாய்                         – 6
சீரகம்                                              – 1/2 டீஸ்பூன்
கசகசா                                            – 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்                              – 1/2 டீஸ்பூன்
மல்லி                                             – 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்                         – 2
இஞ்சி                                              – 1 இன்ச்
பூண்டு                                             – 5 பல்

செய்முறை

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகள் அனைத்தையும் ஒரே அளவாக நறுக்கவும். தேங்காயையும் 20 முந்திரியையும் அரைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களையும் அரைக்கவும். சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பையும், கிஸ்மிஸ்ஸையும் வறுத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய் சூடாக்கி அதில் பெரிய வெங்காயம் போட்டு வதக்கி பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின்னர் காய்கள் வேகும் அளவுக்கு நீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்து கொதிக்க விடவும். எலுமிச்சை சாற்றையும் சேர்க்கவும். வறுத்து வைத்துள்ள முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Leave a Reply