காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுங்கள். உரி தாக்குத்தலுக்கு பின் அலறும் பாகிஸ்தான்
உரி ராணுவ முகாம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் மீது தீவிர நடவடிக்கை எடுக்க முயற்சித்து வரும் நிலையில் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஆகியோரை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொதுசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நேற்று ஜான் கெர்ரி, நியூசிலாந்து பிரதமர் ஆகியோர்களை தனித்தனியே சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஆனால் இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா ஒப்புக்கொண்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சனை குறித்து மூன்றாவது தலையிட முடியும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி கூறியதாக கூறப்படுகிறது. இந்த பதில் ஷெரீப்புக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.