கோடிகள் கொட்டினாலும் அவருடன் நடிக்க மாட்டேன். நயன்தாரா குறிப்பிட்டது யாரை?

கோடிகள் கொட்டினாலும் அவருடன் நடிக்க மாட்டேன். நயன்தாரா குறிப்பிட்டது யாரை?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சம்பளம் தற்போது ரூ.3 கோடியாக எகிறிவிட்டாலும் அவர் கால்ஷீட்டுக்காக பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் ஒருவர் நயன்தாராவுடன் நடிக்கவுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக ஒரு செய்தி கோலிவுட்டில் உலாவி வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த நயன்தாரா தரப்பு, எத்தனை கோடிகள் கொட்டினாலும், அந்த தொழிபதிபர் படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும், நயன்தாரா தற்போது கதை மற்றும் கேரக்டரின் முக்கியத்துவம் அறிந்த பின்னரே கால்ஷீட் கொடுத்து வருவதாகவும் கூறினர்.

மேலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு நயன்தாராவின் கால்ஷீட் டைரி நிரம்பிவிட்டதாகவும், இப்போதைக்கு அவர் புதிய படங்கள் ஒப்புக்கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply