நயன்தாரா ‘விக் வைக்க ‘விக்ரம்’ படம் காரணமா?
’10 எண்றதுக்குள்ள’ படத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடித்து வரும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரமுக்கு முதன்முதலாக ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திற்காக தனது ஒரிஜினல் முடியை நிரந்தரமாக கலர் மாற்றம் செய்துள்ளதாக வந்துள்ள செய்தி அவருடைய தொழில் பக்தியை காட்டுவதாக கோலிவுட்டில் அதிசயமாக பேசப்பட்டு வருகிறது..
இந்த படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக நயன்தாராவின் முடியின் கலரை மாற்ற வேண்டும் என்று இயக்குனர் ஆனந்த் சங்கர் கேட்டுக்கொண்டார். இதற்கு உடனே பதிலளிக்காத நயன், யோசித்து சொல்வதாக கூறினார்.
ஒரே நேரத்தில் அவர் பல படங்களில் நடித்து வருவதால் முடியின் கலரை மாற்ற நயன்தாரா ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும், அவர் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் விக் வைத்து அந்த காட்சிகளை படமாக்க இயக்குனர் முடிவு செய்தார்.
ஆனால் மறுநாள் படப்பிடிப்புக்கு வரும்போது நயன்தாரா, இயக்குனர் விருப்பப்படி முடியின் கலரை மாற்றி நிரநதரமாக மாற்றி வந்தார். இதைப்பார்த்த இயக்குனர் ஆனந்த் சங்கர், விக்ரம் உள்பட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். மற்ற படங்களில் நடிக்கும்போது என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு விக் வைத்து கொள்வேன் என்று நயன்தாரா கூறினாராம்.