சென்னை எழும்பூருக்கு திடீரென வந்த நயன்தாரா: என்ன காரணம்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னை எழும்பூரில் உள்ள சாலையோரம் உள்ள மக்களுக்கு திடீரென பரிசுகளை வழங்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இன்று காலை சென்னை எழும்பூர் வந்தனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு அவர்கள் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் இந்த பரிசு பொருளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டப்பொது பல முதியோர் இல்லங்கள் மற்றும் சிறுவர் இல்லங்களில் இலவசமாக உணவு பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.