நயன்தாரா கையினால் ரூ.5 லட்சம் பெற என்ன செய்ய வேண்டும்?
நயன்தாரா நடித்த ‘மாயா’ திரைப்படம் நாளை முதல் உலகெங்கிலும் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படம் ஒரு திகில் திரைப்படம் என்றும் இந்த படத்தின் ஸ்கிரிப்டை கேட்டபோதே தான் பயந்துவிட்டதாக நயன்தாரா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தை யாராவது தைரியமாக தனியாக பார்த்தால் ரூ.5 லட்சம் தரத்தயார் என்றும், அந்த பணத்தை நயன்தாரா கையினால் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த படத்ஹ்டின் தயாரிப்பாளர் சி.கல்யாண் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பினால் நயன்தாரா அதிர்ச்சி அடைந்துள்ளார். தன்னை ஒருவார்த்தை கேட்காமல் எப்படி தயாரிப்பாளர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என்று தனது அதிருப்தியை அவர் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த அறிவிப்பால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இருமடங்கு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த அறிவிப்பு ‘மாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘மயூரி’ படத்தை பார்ப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பாணியில் பிரசாந்த், மீனா நடிப்பில் வெளியான ’ஷாக்’ படத்துக்கு படக்குழுவினர் சவால் வைத்தது குறிப்பிடத்தக்கது.