சென்னை விமான நிலையத்தில் நயன்தாரா சூட்கேஸ்கள் ஏற்படுத்திய பரபரப்பு.

nayanகோலிவுட்டின் முன்னணி நடிகை நயன்தாரா நேற்று தனது சொந்த ஊரான கொச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு ஐந்து சூட்கேஸ்களுடன் வந்திருந்தார். ஆனால் விமானம் கிளம்ப சில நிமிடங்களே இருப்பதால், நயன்தாராவின் சூட்கேஸ்களை விமானத்தில் ஏற்ற விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். நயன்தாரா அதிகாரிகளிடம் வாதாடியும் அதிகாரிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி தனது கைப்பையுடன் விமானத்தில் ஏறி கொச்சி சென்றார்.

ஒவ்வொரு ஆண்டும் நயன்தாரா தனது குடும்பத்தினர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக பல பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பரிசுப்பொருட்களை வாங்கியும் அவற்றை கொண்டு செல்ல முடியாமல் போனதுக்காக அவர் மிகவும் வருந்தியதாக கூறப்பட்டது.

நயன்தாரா வாங்கிய பரிசுப்பொருட்கள் பார்சல் சர்வீஸ் மூலம் இன்று கொச்சி சென்றடையவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. நயன்தாரா தற்போது மாஸ், நைட்ஷோ, இது நம்ம ஆளு, நண்பேண்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply