ஜர்னலிஸ்ட் கேரக்டரில் நயன்தாரா
தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்கனவே ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘கொலையுதிர் காலம்’ உள்பட பல படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பரதன் கிருஷ்ணாமாச்சாரி இயக்கவுள்ளார். முதல்முறையாக பத்திரிகையாளர் வேடம் ஏற்கும் நயன்தாரா, தனது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு மர்மத்திற்கு விடை தேட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்கிறார்.
தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முதலாக மங்கோலியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம். செழியன் ஒளிப்பதிவில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது.