பிரமாண்டமான ‘மகாபாரத’ கதையில் திரெளபதியாகும் நயன்தாரா
எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி 2′ பெற்ற வெற்றி காரணமாக அதிக பட்ஜெட்டில் சரித்திர படங்கள் தயாரிக்கும் டிரெண்ட் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் மட்டுமே படங்கள் தயாரிக்கும் கன்னட திரையுலகம் தற்போது ‘குருஷேத்திரா’ என்ற பெயரில் மகாபாரத கதையை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
நாகண்ணா இயக்கி வரும் இந்த படத்தில் துரியோதனன் கேரக்டரில் தர்ஷன், கர்ணன் கேரக்டரில் ரவிச்சந்திரன், பீஷ்மர் கேரக்டரில் அம்ரீஷ் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் திரெளபதி கேரக்டரில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டால் அவர் கேட்கும் தொகையை சம்பளமாக கொடுக்க தயாரிப்பு தரப்பு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாரா இன்னும் இந்த படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் திரெளபதி கேரக்டரில் அவர் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் மிக விரைவில் வெளியாகவுள்ளது.