நயன்தாரா சமீபத்தில் தெலுங்கு படவுலகில் தடை செய்யப்பட்டார். அவர் இயக்குனர் சேகர் கம்முலா படமான ‘அனாமிகா’ படத்தின் விளம்பர விழாவிற்கு வரவில்லை என்ற புகார் எழுந்ததால் அவர் தடை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் தற்போது நயன் தாரா தெலுங்கில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இதனால் நயன்தாரா தற்போது தமிழிலும் இந்த பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக தன்னிடம் படம் ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் ஒரு முக்கிய கண்டிஷனை போடுகிறாராம். படத்தில் நடிப்பது மட்டுமே தன்னுடைய வேலை என்றும், எந்த காரணத்தை முன்னிட்டும் படத்தின் புரமோஷனுக்கு வரமுடியாது என்றும் ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொள்கிறார். இந்த கண்டிஷனுக்கு ஒப்புக்கொள்ளும் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே அவர் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.
நயன்தாரா தடையை கேள்விப்பட்டு அஜீத்தான் இந்த ஆலோசனையை அவருக்கு சொல்லியதாக கூறப்படுகிறது. அஜீத் தான் நடிக்கும் படத்தின் பூஜை விழா முதல் வேறு எந்த விழாவிலும் கலந்துகொள்ள மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்தின் ஆலோசனைப்படியே நயன்தாரா, தற்போது இந்த கண்டிஷனை தன்னுடைய ஒப்பந்தத்தில் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. நயன் தாராவின் புதிய கண்டிஷனால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.