ஹிட்லர் காலத்தில் மண்ணில் புதைந்த தங்க ரெயிலை தேடும் பணி தொடக்கம். போலந்து அறிவிப்பு

ஹிட்லர் காலத்தில் மண்ணில் புதைந்த தங்க ரெயிலை தேடும் பணி தொடக்கம். போலந்து அறிவிப்பு

gold train2ஆம் உலகப்போரின்போது போலந்து நாட்டில் ஹிட்லரின் நாச்ஷிப் படைகளால் மண்ணில் புதைக்கப்பட்ட தங்க புதையல் ரெயிலை மீட்க பூமியை தோண்டும் பணியை தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஷிப் படைகள் அதிக ஆதிக்கம் செலுத்தின. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹிட்லர் அங்கு சுரங்க ரெயில்களை இயக்கி ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தங்கம், மற்றும் வைரங்களை ரகசியமாக கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிறநாடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைரநகைகள், போர் ஆயுதங்களுடன் ‘நாஜி’ ரெயில் ஒன்று போலந்து நாட்டின் சுரங்க பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாயமானது. 2ஆம் உலகப்போரில் நாஷிப் படைகளுக்கு கடும் போட்டியாக இருந்த சோவியத் ரஷியாவின் சிவப்பு படை வ்ரோகிலோ என்ற இடத்தில் சுரங்க ரெயில் பாதையை மூடிவிட்டதாகவும், இதன் காரணமாக இந்த ரெயில் பூமிக்குள் அப்படியே புதைந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1945ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பின்னர் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரத்துடன் புதைந்து கிடக்கும் ரெயிலை கண்டுபிடிக்க போலந்து பல்வேறு முயற்சிகளை செய்தது.போலந்தை சேர்ந்த பியோடர் கோபர், ஜெர்மனியை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் ரிச்டர் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் இதில் ஈடுபட்டனர். பூமிக்குள் கதிர் வீச்சு மூலம் ஸ்கேன் செய்த போது வால்பிரிச் பகுதியில் சுரங்க ரெயில் பாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, அங்கு தங்கத்துடன் புதைந்து கிடக்கும் ரெயிலை மீட்க பூமியை தோண்டும்பணி தற்போது தொடங்கியுள்ளது. பல பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் அடங்கிய அந்த ரயில் கிடைக்குமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்

Leave a Reply