பிரபல மலையாள இயக்குனர் பாசில் மகன் பகத் பாசிலுடன் வருகிற ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நடிகை நஸ்ரியாவுக்கு திருமணம் நடைபெற இருக்கின்றது., திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருவீட்டாரும் பத்திரிகை அடிப்பது முதல் திருமணத்திற்கு தேவையான புடவைகள் மற்றும் நகைகள் வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று நஸ்ரியா ஏற்கனவே அறிவித்தபடியால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுப்பதில் தற்போது பிசியாக இருக்கின்றார்.
இந்நிலையில் பிரபல மலையாள இயக்குனர் சந்தோஷ் நாயர், பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடியை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க விரும்பி நஸ்ரியாவிடம் அணுகினார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகவும், ஹீரோ கணவராகவே இருந்தாலும், மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்பவில்லை என்றும் அவரது கோரிக்கையை மறுத்துவிட்டார் நஸ்ரியா.
இந்த கேரக்டரில் நடிக்குமாறு பகத்பாசிலும் நஸ்ரியாவை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டும் நஸ்ரியா பிடிவாதமாக நடிக்க மறுத்ததால், நஸ்ரியா மீது பகத் பாசில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் சந்தோஷ்குமார் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்க நிவேதிதா என்ற நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் வருங்காலகணவராக இருந்தாலும் என்னை நடிக்கும்படி கட்டாயப்படுத்த பகத் பாசிலுக்கு உரிமையில்லை என்று நஸ்ரியா தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.