நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி.

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி.

இந்தியா முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின்படி மத்திய அரசு நேற்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி வரிமுறையை அறிமுகப்படுத்தியது. நேற்று இரவு பாராளுமன்றத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி முறைப்படி ஜிஎஸ்டியை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரத பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது: இன்று நள்ளிரவில் நாட்டின் எதிர்கால பாதையை முடிவு செய்ய இருக்கிறோம். இந்திய வரலாற்று நிகழ்விற்கு நாட்டின் 120 கோடி மக்களே சாட்சி. நாட்டின் கூட்டாச்சி தத்துவத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த முடிவு எடுப்பதற்காக பல்வேறு தரப்பினரின் உழைப்பு, அர்பணிப்பு இடம்பெற்று இருக்கிறது. நமது எல்லோரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

பெரிய பெரிய முக்கிய நிகழ்வுகள் அரங்கேறிய இடம் இது. பல ஆண்டுகள் கழித்து, இந்த மைய மண்டபத்தில் வரலாற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொருளாதாரம் தொடர்பான முக்கிய நிகழ்வு அரங்கேறி வருகிறது. பாராளுமன்றத்தில் பல எம்.பிக்கள் இது குறித்து பேசி இருக்கிறார்கள். அது போன்ற விவாதங்களின் விளைவுதான் இந்த ஜிஎஸ்டி.

பொருளாதார அமைப்பை முறைப்படுத்துவதில் ஜிஎஸ்டி முக்கியமான மைல்கல். மத்திய மாநில அரசுகளை ஒருங்கிணைத்து இந்தியாவை ஒரு குழுவாக காட்டுகிறது ஜிஎஸ்டி. மத்திய அரசானாலும், மாநில அரசானாலும்,ஏழைக்களுக்கான சலுகைகளில் சமரசம் செய்யவில்லை. கீதையில் 18 அதித்தியாயங்கள் இருப்பது போன்று 18 கவுன்சில் கூட்டத்திற்கு பின் ஜிஎஸ்டி அமலாகிறது.

முதலில் மாநிலங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தது. தொடர்ந்து ஆலோசித்து வந்ததையடுத்து, அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முயற்சித்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காமல் போகாது. சர்தார் வல்லபாய் பட்டேல் 500 பகுதிகளை சேர்த்து ஒரு தேசமாக காட்டினார்.

அதுபோலத்தான் பல்வேறு வரிகள் சேர்ந்து, ஜிஎஸ்டியாக உருவாகி உள்ளது. ஒரு பொருளின் தயாரிப்பு விலை ஒன்றாக இருக்கும், மாநிலத்திற்கு மாநிலம் அது மாறுபட்டு இருக்கும். ஜிஎஸ்டி வரியால்,அந்த நிலை மாறி, நாடு முழுவதும் ஒரே வரியாக இருக்கும்.

ஊழல்,கருப்பு பணத்தை ஒழிக்க ஜிஎஸ்டி உதவியாக இருக்கும். பல வரிகள் விதிக்கப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல்கள் இனி இருக்காது. நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு ஜிஸ்டி உதவிக்கரமாக இருக்கும். இது மத்திய அரசின் சாதனை அல்ல, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. பொருளாதார அமைப்பை சரிசெய்ய ஜிஎஸ்டி முக்கியமான மைல்கல்.

சாதாரண வியாபாரிகளுக்கு அதிகாரிகளால் இனி தொந்தரவு இருக்காது அல்லது அதிகமாக குறையும். கொஞ்சம் முயற்சித்தால், இந்திய புதிய திட்டத்தில் நாம் இணைந்து விட முடியும். ரயில்வே போல்,ஜிஎஸ்டியையும் மத்திய மாநில அரசுகள் இணைந்து கையாளும். பொருளாதார அடிப்படையில் நலிந்த மக்களின் சுமையை குறைக்க முடியும்.

ஜிஸ்டியால்,வியபாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கும் என நம்புகிறேன். புரிந்து கொள்வதற்கு கடினமாக விஷயம் வருமானவரி என ஐன்ஸ்டீன் கூறினார். நீண்ட ஆலோசனைக்களுக்கு பிறகே ஜிஎஸ்டிக்கு இறுதி வடிவம் தரப்பட்டது.

இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு இது உதவி கரமாக இருக்கும். சுதந்திர நள்ளிரவைப்போன்று இந்த நள்ளிரவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜிஎஸ்டி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். புதிய எதிர்காலம் தொடங்கி உள்ளது. ஜிஎஸ்டி – நாட்டின் புதிய பரிணாமத்தை உருவாக்கி உள்ளது. ஜிஎஸ்டி வர அனைத்து கட்சிகளும் உதவி உள்ளன. ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால் ஜிஎஸ்டி வந்திருக்காது. பலமுனை வரி, ஒருமுனை வரியாக மாறியுள்ளது. ஜிஎஸ்டி, கருப்பு பணத்தை ஒழிக்கும்; பதுக்கலுக்கு வாய்ப்பளிக்காது. ஜிஎஸ்டி மூலம் நவீன வரி முறைக்கு மாறியுள்ளோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply