என்.டி.டி.வி தேர்தல் கருத்துக்கணிப்பு: அதிமுக 25, திமுக 11, பா.ஜ.க. 3, காங்கிரஸ் 0

admk

தேர்தல் கருத்துக்கணிப்புகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் NDTV நேற்று தனது இரண்டாவது கட்ட கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 25 இடங்களும், திமுகவுக்கு 11 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்களால் பிரபலப்படுத்தப்படும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு வெறும் 2 அல்லது 3  இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வெறும் 5% ஓட்டுக்களை மட்டுமே காங்கிரஸ் பெறும் என்றும் அந்த கட்சிக்கு ஒரு இடம் கூட தமிழகத்தில் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

கடந்த 2009 தேர்தலில் திமுகவுக்கு 19 தொகுதிகளும், அதிமுகவுக்கு 9 தொகுதிகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய அளவில் 11 மாநிலங்களில் மொத்தம் 283 தொகுதிகளில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிபுகளில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 160 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 54 தொகுதிகளும், மற்றவைகளுக்கு 69 தொகுதிகளும் கிடைக்கும் என என்.டி.டி.வி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

election

Leave a Reply