அதிமுக -22, திமுக-14, பாஜக -3. என்.டி.டி.வி கருத்துக்கணிப்பு தகவல்

survey copy

என்.டி.டி.வி எடுத்த தேர்தல் சர்வே முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் அதிமுக 22 தொகுதிகளிலும், திமுக 14 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் என்.டி.டி.வியின் ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் கருத்துக்கணிப்பு எடுத்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் எடுத்த சர்வேயில் அதிமுகவுக்கு 27 தொகுதிகள் கிடைக்கும் என சர்வே கூறியது. கடந்த மார்ச் மாதத்தில் அது 25ஆக குறைந்தது. தற்போது மேலும் 3 தொகுதிகள் குறைந்து 22ஆக மாறியுள்ளது. அதே நேரத்தில் திமுக 10 தொகுதியில் இருந்து 14 தொகுதியாக அதிகரித்துள்ளது.

ஆனால் பாரதிய ஜனதாவின் ஆறு கட்சிகள் அடங்கிய கூட்டணி வெறும் 3 தொகுதிகள் மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதிலும் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என கருத்துக்கணிப்பு தெளிவாக கூறுகிறது. இந்த கருத்துக்கணிப்பால் விஜயகாந்தும் தேமுதிகவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் இந்த கருத்துக்கணிப்பில் கண்டுகொள்ளப்படவே இல்லை. பெரும்பாலான மக்கள் காங்கிரஸ் டெபாசிட் பெறுவதே கடினம் என்றுதான் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply