மதுரை அருகே மனைவியின் குடும்பத்தையே வெட்டி கொலை செய்த கணவன். பெரும் பரபரப்பு

murdersமதுரை அருகே மாமனார் குடும்பத்தையே வெட்டி கொலை செய்த மருமகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தொட்டியபட்டி என்றா கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமிக்கும்   கோமதி என்பவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன் கோமதி தன் தந்தை சின்னச்சாமி வீட்டிற்கு கோபித்து கொண்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் கோமதியின் பெரியப்பா மகன் திருமணத்திற்கு நேற்று கோமதி, தந்தை, தாய் மற்றும் சகோதரிகளுடன் சென்றிருந்தார். இதே திருமணத்திற்கு வந்திருந்த சின்னச்சாமியின் சகோதரிக்கும் கோமதிக்கும் பஸ் நிலையத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து சின்னச்சாமியின் சகோதரி தன் சகோதரர் சின்னச்சாமியிடம் கூற, இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது பரமசிவத்துடன் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பஸ் நிலையத்திற்கு சென்று அங்கு பேருந்துக்காக காத்திருந்த தனது மனைவி கோமதி மாமனார் சின்னச்சாமி, மாமியார் ராமுத்தாய், நாத்தனார்கள் பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகிய 5 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் இந்த கொலை நடந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

 இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகையாபுரம் போலீசார், காயம் அடைந்தவர்களையும், இறந்தவர்களின் உடல்களையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கமலக்கண்ணன் மற்றும் அவரது தம்பி பரமசுந்தரத்தையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply