சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவு: 1000 பேர் பலியா? அதிர்ச்சி தகவல்

சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவு: 1000 பேர் பலியா? அதிர்ச்சி தகவல்

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோன் என்ற நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமின்றி நாட்டின் ஒருசில பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் மாயமகியுள்ளதாலும் அந்நாட்டு அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது. சுமார் 1000 பேர் வரை இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

இந்த நிலையில் பாதிப்பில் இருந்து விடுபட மீட்புப்பணிகளுக்கு சியரா லியோன், சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ளது. அந்நாட்டு அதிபர் பட்மடா கமாரா இதுகுறித்து கூறியபோது ஐநா மற்றும் பிறநாடுகள் மீட்புப்பணிக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிபரின் கோரிக்கையை ஏற்று சியரா லியோன் நாட்டின் அண்டை நாடுகள் மீட்புப்பணிகளுக்கு உதவ சம்மதம் தெரிவித்துள்ளன. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் அந்நாட்டில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply