பற்றி எரிகிறது பெங்களூரு. தமிழக பஸ்கள், லாரிகள் சாம்பல்

பற்றி எரிகிறது பெங்களூரு. தமிழக பஸ்கள், லாரிகள் சாம்பல்

busசுப்ரீம் கோர்ட் உத்தரவால் காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டதில் இருந்தே ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த் என இரு மாநிலங்களுக்கு இடையே அசாதாரண சூழ்நிலை இருந்து வந்த நிலையில் இன்று உச்சகட்டமாக தமிழக பதிவு எண்கள் கொண்ட பேருந்துகள், லாரிகள் ஆகியவை குறிவைத்து கொளுத்தப்பட்டதால்க் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் இருந்து 17 கி.மீ தொலைவில், கெங்கேரியில் உள்ள தனியார் பேருந்துகள் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தமிழக பதிவு எண் கொண்ட பேருந்துகள் கன்னட இனவெறியர்களால் நேற்று இரவு தீவைத்து கொளுத்தப்பட்து. பேருந்துகளை கொளுத்தும்போது ‘‘நாங்கள் எங்கள் ரத்தத்தைக் கொடுப்போம்… ஆனால், காவிரியை அல்ல…’’ என்று கோஷமிட்டுக் கொண்டே கொளுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

‘‘வன்முறை அதிக அளவில் வெடித்துள்ளதால், பெங்களூரு பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. ஆனபோதிலும், அங்கு தமிழர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது’’ என்று பெங்களூரில் வசிக்கும் தமிழகர்கள் அதிர்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

https://www.youtube.com/watch?time_continue=6&v=KKPAtiB-mKk

Leave a Reply