500 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது: மாணவர்கள் அதிர்ச்சி

500 பொறியியல் கல்லூரிகளுக்கும் மேலாக உரிமையை புதுப்பிக்கவில்லை என்பதால் 500 கல்லூரிகள் மூடப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது 2021- 2022 கல்வியாண்டில் 12 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால் 15 லட்சத்து 48 ஆயிரம் இடங்கள் நிரப்ப அரசு அனுமதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கல்வி தரம் உட்கட்டமைப்பு வசதிகளை அதிக கட்டணம் ஆகியவை காரணமாகவே பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேரவில்லை என்பதும் பொறியியல் படித்தவருக்கு வேலை வாய்ப்பும் அரிதாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது

நடப்பாண்டில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாகவும் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தங்களுடைய உரிமத்தை புதுப்பிக்காமல் இருப்பதாகவும் அந்த கல்லூரிகள் மூடப்படும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது