மீள முடியாத அமெரிக்கா
கொரோனா பாதிப்பில் இருந்து வல்லரசு நாடான அமெரிக்கா மீள முடியாமல் தவித்து வருவதால் அந்நாட்டில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது
அமெரிக்காவில் ‘கொரோனா’வுக்கு 59, 252 பேர் பலியாகியுள்ளதாகவும், அந்நாட்டில் மொத்தம் 1,035,765 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 3,136,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 217,813 பேர்கள் பலியாகியுள்ளதாகவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் கொரோனாவுக்கு 232,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 23,822 பேர்கள் பலியாகியுள்ளதாகவும், இத்தாலியில் கொரோனாவுக்கு 201,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 27,359 பேர்கள் பலியாகியுள்ளதாகவும், பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு 165,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 23,660பேர்கள் பலியாகியுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனாவுக்கு 161,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21,678பேர்கள் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.