உலக அளவில் கொரோனாவால் பலியானவர்கள் எத்தனை பேர்?

எப்பொழுது முடிவுக்கு வரும்?

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வரை பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை நெருங்கியுள்ளது

உலகம் முழுக்க 14,25,932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உலகம் முழுக்க 81,987 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் மொத்தம் 3,01,828 பேர் இதுவரை உலகம் முழுக்க குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 7500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரிட்டனில் மட்டும் 55,242 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்நாட்டில் மொத்தம் 6159 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிகிறது. அதேபோல் துருக்கியில் 34,109 பேர் பாதிக்கப்பட்டும். 725 பேர் பலியாகியும் உள்ளனர். சுவிஸ் நாட்டில் 22,253 பேர் பாதிக்கப்பட்டும். 821 பேர் பலியாகியும் உள்ளனர்

Leave a Reply