இது சிறிய முட்டை வடிவ இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும்,கொத்தான காய்களையும், சிவப்பு நிற தண்டினையும் உடைய சிறிய செடி. செடி முழுவதும் மருத்துவ குணமுடையது. தாது எரிச்சல் தணித்தல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், நஞ்சு முறித்தல் ஆகிய குணங்களையுடையது.
செடியை வேருடன் உலர்த்திப் பொடித்து சமன் கற்கண்டுத் தூள் கலந்து 1 தேக்கரண்டிப் பாலில் சாப்பிட்டு வர தொழு நோய் போன்ற கடும் நோய்களையும் குணப்படுத்தும்.
செடியைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவிவர சொறி, சிரங்கு, கபாலக்கரப்பான் ஆகிவை தீரும். இலைகளை அரைத்துப் பற்றிடக் கட்டிகள் உடைந்து கொள்ளும். வேரால் பல் துலக்கவோ அல்லது வேரை மென்று துப்பவோ செய்தால் வாய்ப்புண், பல்வலி தீரும்.