தமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்புக்காக மருத்துவ கல்லூரியில் சேர காத்திருக்கும் மாணவர்களுக்கு நீட் குறித்த தெளிவாக விளக்கம் இல்லாமல் குழப்பம் நீடித்த நிலையில் உள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபடி இந்த வருடம் மட்டுமாவது விலக்கு அளித்தால் நல்லது என்று பெரும்பாலான மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஒரு ஆண்டு மட்டும் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தர, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் யோசனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு சமீபத்தில் நீட் விலக்கு வேண்டி அவசர சட்டம் இயற்றியது.
இந்த அவசர சட்டத்தில் சில திருத்தங்கள் செய்த மத்திய அரசின் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இந்த ஆண்டு நீட் இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்